வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான புலம் பெயர்ந்த தமிழர்களின் கல்வி உதவித்திட்டம் மகேஸ்வரி மன்றத்தினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

 

மனித உரிமைகள்

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடணம்

அடிப்படை உரிமைகள்

சிறுவர் உரிமைகள்

பெண்கள் உரிமைகள்

பொருளாதார சமூக உடன் பாட்டு உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு

இலங்கை நீதித்துறைகள் கட்டமைப்பு

நீதிமன்ற கட்டமைப்பு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
ஒம்புட்ஸ்மென்

மன்ற பொறுப்பு

மன்ற சபை
முகாமைத்துவம்
ஆலோசனைக்குழு

பங்காளர்கள்

வர்த்தக பங்காளர்கள்
கல்விசார் பங்காளர்கள்
கருத்திட்ட பங்காளர்கள்
நிதியளிப்பு பங்காளர்கள்
ஏனைய பங்காளர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முதல் பக்கம்

 

 

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வும் பணியும்!

அப்போதிருந்தே சமூக அக்கறை மாத்திரமல்ல ஆன்மீகத்திலும் நாட்டம் கொண்டிருந்தார். பெண்கள் தலை நிமிர்ந்து சமத்துவத்துடன் வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவர் தன்னுடைய கொள்கைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்.

அவர் அநியாயங்களை அழித்து ஒவ்வொருவரும் தனி மனித சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்ற பேரவா கொண்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு இனக் கலவரத்தை அடுத்து ரீ.ஆர்.ஆர்.ஓ ( வுசுசுழு) தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தில் கந்தசாமி மற்றும் பலரோடு இணைந்து அகதிகளாக்கப்பட்ட எமது மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்.

 

 

 

 

 

 

 

 

கொழும்பிலேயே 1983 ஆம் ஆண்டு வரை இருந்தார். 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தின் போது இவர் தங்கியிருந்த வீடு எரிக்கப்பட்டது. ஆனால் சகோதர சிங்கள இன சட்டத்தரணிகளால் பாதுகாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின் வீடு வந்து சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் வீட்டோடு எரிக்கப்பட்டு விட்டார், இனித் திரும்ப மாட்டார் என்றே சிலர் கருதினர். ஆனால் அம்மாவோ நாங்களோ அதனை நம்பவில்லை. கோயில்களுக்கும், சாத்திரம் சொல்பவர்களிடமும் ஓடினோம். அவர்கள் தந்த நம்பிக்கையில் நாங்கள் காத்திருந்தோம். மகா லட்சுமியாக மீண்டும் வீடு வந்து சேர்ந்தார்;. அதற்குப் பின் குறுகிய காலம்தான் எங்களுடன் இருந்தார். மீண்டும்; தனது காலம் வீணாகப் போகிறது அதற்குள் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி இந்தியா பயணமானார்;.

அப்போது இலண்டனில் தங்கியிருந்த ரி.ஆர்.ஆர்.ஓ கந்தசாமி அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி மதுரையில் தமிழ் தகவல் நிலையத்தை ஆரம்பித்து புலம் பெயர்ந்த அகதிகளுக்காகப் பாடுபட்டார். தனது நினைவிலும் கனவிலும் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என எண்ணி பசி, தூக்கம் மறந்து இரவு பகலாகப் பாடுபட்டார். அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு உடைகள், உணவுப் பொருட்கள், பாய்கள், சமையல் பாத்திரங்கள், மருந்துகள் எனப் பலவகைகளிலும் உதவியதுடன் வீடுகளில் தங்கியிருந்த அகதிகள், போராளிகள் என யார் வந்தாலும் இல்லை என்னாது வாரி வழங்கினார்.அந்நியப்படுத்தப்பட்ட போராளிகள், அகதிகள், நோயாளிகள் என அனைவரையும் நேசித்தார்;. அது மட்டுமன்றி இந்திய மக்களுக்கு இலங்கை மக்கள் படும் கஷ்டங்களை எடுத்துக் கூறியது மட்டுமன்றி தமிழ் நாட்டிலிருந்து டெல்லி வரை பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் நடாத்தினார். இந்தியாவின் பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து உரையாடினார். இரவு பகலாக எம்மக்களுக்காகப் பாடுபட்டார். எல்லா இயக்கங்களுக்கும் பாரபட்சமின்றி உதவி புரிந்தார். பண உதவி கேட்டு வந்தவர்களுக்கு தன்னுடைய நகைகளை அடைமானம் வைத்துக் கூட உதவி புரிந்தார்.

1989 அளவில் மதுரையிலிருந்து சென்னைக்கு சென்று அங்கு தனது அலுவலகத்தை தொடர்ந்து நடாத்தினார். (படம்) அப்போது நு.P.சு.டு.கு தலைவர் பத்மநாபாவும் அவரது சகாக்கள் 13 பேரும் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கெதிராகக் கண்டித்து அறிக்கை விட்டதுடன் இந்திய மக்களின் ஆதரவுடன் பாரிய ஊர்வலத்துடன் அவர்களை அடக்கம் செய்ய முன்னின்றார். இதனால் நிர்க்கதியற்றோர்க்கு உதவிகள் செய்ததுடன் பெண் போராளிகளுக்கு தனது வீட்டில் புகலிடம் கொடுத்திருந்தார். ஈழப்போராட்டத்தின் முன்னோடியும், ஈரோஸ் அமைப்பின் ஸ்தாபகருமான இரட்ணசபாபதி அவர்கள் சுகயீனமுற்றிருந்த போது அவருடன்; சிறிது காலம் தங்கியிருந்தார்.

1995 ஆம் ஆண்டு ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பை ஏற்று மீண்டும் இந்தியாவிலிருந்து இலங்கையை நோக்கிப் பயணமானார்.1996 ஆம் ஆண்டு கொழும்பில் மனித உரிமைகள் சங்கமான மனித கௌரவத்திற்கான மன்றத்தை உருவாக்கி மனித உரிமைகளுக்கான பணிகளில் தடம் பதித்தார். இம் மன்றமானது வட கிழக்கில் காணாமற் போனோர், சிறைப் பிடிக்கப்பட்டோர் ஆகியோரை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலமாக நூற்றுக்கணக்கான மக்களை சிறை மீட்டதுடன் காணாமற் போனோரின் நிலைமைகளையும் கண்டறிந்தார். அவர்களின் உறவினர்கள் ஊர் திரும்பிச் செல்வதற்குக் கூடப் பணம் இலலாமல் இருந்த போது அவர்களை தன்னுடைய பணத்தில் ஊருக்குச் செல்வதற்கு உதவி புரிந்தார். 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் காணாமல் போன எமது உறவுகளுக்காகவும் செம்மணியில் புதைக்கப்பட்ட எமது உறவுகளின் துயரங்களுக்காகவும் மனிதாபிமானப்பணிகளில் முன்னின்று உழைத்தார். இம்மன்றமானது மூன்று வருடக் குறுகிய காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் அங்கீகாரத்தைப்; பெற்றது.

லண்டனில இருக்கும் சகோதரர்கள்; அங்கு வருமாறு அழைத்தபோது அவர் அங்கு வருவதற்கு விரும்பவில்லை. எமது மண்ணின் மகிமை உங்களுக்கு புரியாது இ நான் எனது ஊரில் எம் மக்களுடன்தான் வாழ்வேன் என்று கூறினார். இரண்டு, மூன்று தடவைகள் மாநாடுகளுக்காக லண்டன் வந்த போது கூட அதிக நாட்கள் அங்கு தங்குவதில்லை. நாட்டுக்காக நிறைய சேவைகள் செய்ய வேண்டும் இ இயன்றவரை பாடுபட வேண்டும் என்ற மாபெரும் விருப்பம் கொண்டிருந்தார். அண்மையில் நாம் லண்டன் வந்து விடும்படி கேட்ட போது தான் மக்களுக்காக வாழ வேண்டும், தனக்கு பகையாளிகள் எவருமில்லை என்று கூறி எமது அழைப்பைத் தட்டிக் கழித்தார்.

ஈ.பி.டி.பி அமைப்புடன் இணைந்திருந்தாலும் தன்னுடைய சுதந்திரமான செயற்பாடுகளிலிருந்து அவர் விலகவில்லை. அகதிகள், நோயாளிகள், வலது குறைந்தோர் யாவருக்கும் உதவ வேண்டும் எனத் துடித்தார், அதன் பிரகாரம் கௌரவ அமைச்சருடன் இணைந்து இவற்றை நடைமுறைப்படுத்தினார். மும்மொழிகளிலும் ஐயந்திரிபுர கதைக்கக் கூடியவர். இதன் பயனாக சகல இன மக்களுடனும் நல்லிணக்கத்தினைக் கொண்டிருந்தார்.2004 ஆம் ஆண்டு இந்துக் கலாச்சார அமைச்சில் பணி புரிந்த காலத்தில் அவர் யுத்தத்தினால் சேதமடைந்த இந்து ஆலயங்களைப் புனரமைத்தது மட்டுமல்லாமல் இந்து மத வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டார். அத்துடன் இந்து சமயப் பெரியார்களினதும் மதகுருமார்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

தொல்காப்பிய மாநாடு

ஈழத்துப் பூதந்தேவனார் கழகம் 2002 ஆம் ஆண்டு நவம்பர் 20,21 ஆம் திகதிகளில் கொழும்புத் தமிழ்சங்கத்தில் ஏற்பாடு செய்த தொல்காப்பிய மாநாட்டில் கலந்து கொண்டார்.

5வது சேக்கிழார் மாநாடு

அத்துடன் இலங்கையில் 5வது உலக சேக்கிழார் மாநாட்டின் ஏற்பாட்டாளராகத் திகழ்ந்தார். இவ்விழாவானது மூன்று நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இந்தியாவிலிருந்தும் பெருமளவான சமய குருமார்கள் பங்கு பற்றியதுடன் எமது இந்து சமயத்தில் மறைந்து கொண்டு சென்ற பெருமளவான விடயங்களை மீளவும் நடைமுறைக்குக் கொண்டு வந்தார். (மேலும்..)

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வும் பணியும் விபரம்....

 

 

 

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்..! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்..! அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்..! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்.!மதுரத் தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்குரியன பேசீர்..! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்..!!!

 

 

 

 

 

 

 

விரைவில் ....

ஒன்லைன் மூலமாக நன்கொடைகளை மேற்கொள்ள முடியும்

 

 

 

 

 

காலாண்டு அறிக்கை 2009

 

 

 

 

 

 

 

கவிதைகள்...

கட்டுரைகள்...

சிறுகதைகள்..

நகைச்சுவைகள்..

மருத்துவம்...

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உடனடி நிவாரணம் - மீள் குடியேற்றம் - புனர்வாழ்வு - புனரமைப்பு
எம்மை பற்றி |செயற்திட்ட எல்லை வரைபடம் | மன்றக் கொள்கை | எம்முடன் தொடர்பு கொள்ள |மகேஸ்வரி மன்றம்info@maheswaryfoundation.org