வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான புலம் பெயர்ந்த தமிழர்களின் கல்வி உதவித்திட்டம் மகேஸ்வரி மன்றத்தினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
User ID :
Password :

 

மனித உரிமைகள்

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடணம்

அடிப்படை உரிமைகள்

சிறுவர் உரிமைகள்

பெண்கள் உரிமைகள்

பொருளாதார சமூக உடன் பாட்டு உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்பாடு

இலங்கை நீதித்துறைகள் கட்டமைப்பு

நீதிமன்ற கட்டமைப்பு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
ஒம்புட்ஸ்மென்

மன்ற பொறுப்பு

மன்ற சபை
முகாமைத்துவம்
ஆலோசனைக்குழு

பங்காளர்கள்

வர்த்தக பங்காளர்கள்
கல்விசார் பங்காளர்கள்
கருத்திட்ட பங்காளர்கள்
நிதியளிப்பு பங்காளர்கள்
ஏனைய பங்காளர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நேசமுடன் உங்களுக்கு வணக்கம்!.....

நேரம் பொன்னானது!... காலம் கண்ணானது!!.....ஆனாலும் கடந்து போன கால ங்கள் யாவும் கசப்பானவைகள்!!!

இடர் படும் மக்களின் துயர் துடைத்து தேசத்தை கட்டியெழுப்பும் அபிவிருத்திக்காக உழைக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கின்றோம்!....

 

செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வும் பணியும் விபரம்....

 

 

 

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்..! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்..! அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்..! ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்.!மதுரத் தேமொழி மாதர்கள் எல்லாம் வாணி பூசைக்குரியன பேசீர்..! எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்..!!!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காலாண்டு அறிக்கை 2009

 

 

 

 

 

 

 

கவிதைகள்...

கட்டுரைகள்...

சிறுகதைகள்..

நகைச்சுவைகள்..

மருத்துவம்...

 

 

 

 

 

 

 

எமது வரலாற்று வாழ்விடங்களில் எது நடக்கக்கூடாது என்று நாம் எண்ணியிருந்தோமோ அதுவே இங்கு மிகவும் வேதனை தரும் நிகழ்வுகளாக நடந்து முடிந்திருக்கின்றன . சொந்த வாழ்வுடங்களை விட்டு இடம் பெயர்ந்து வாழும் அவலங்களும்

சொந்தங்களை பலி கொடுத்துவிட்டு இருந்த மகிழ்ச்சியையும் பறிகொடுத்து நலன்புரி முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கும் துயரங்களும் இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன!..அழகிய எங்கள் தேசம் எரிந்து சிதைந்தது! எமது மக்களின் இனிய வாழ்வின் மகிழ்ச்சியும் எங்கோ தொலைந்தது!! சிதைந்து போன தேசத்தை கட்டியெழுப்பவும், தொலைந்து போன எமது மக்களின் மகிழ்ச்சியை மறு படியும் வரவழைக்கவும் நாம் அனைவரும் ஒன்று பட்டு உழைப்பதே எமக்கு முன்பாக விரிந்து கிடக்கும் எமது தேசப்பணியாகும்.

எமது மக்களின் துயரங்களுக்கும், அவலங்களுக்கும் முன்னால் எமக்குள் எந்த வித அரசியல் அடையாளங்களோ, அரசியல் பேதங்களோ முகம் காட்டிவிட முடியாது. கடந்த கால அரசியல் முரண்பாடுகளையும், அரசியல் பேதங்களையும் களைந்து விட்டு நாம் அனைவரும் ஒன்று பட்டு நின்று எமது மக்களின் துயர் துடைக்கவும், தேசத்தை கட்டியெழுப்பவும் எழுந்து நிமிர்ந்திருக்க வேண்டிய தருணம் இது. உங்களில் பலரும் சமூக சார்பான அமைப்பு சார்ந்தவர்களாகவும், அரச சார்பற்ற அமைப்பு சார்ந்தவர்களாகவும் ஏற்கனவே எமது மக்களின் நலன் காக்கும் பணிகளில் ஈடு பட்டவர்களாக இருக்கலாம். ஆனாலும், எமது மக்களின் துயர் துடைக்கவும், எமது தேசத்தை கட்டியெழுப்பவும் எம்மால் உருவாக்கப்பட்டிருக்கும் மகேஸ்வரி மனித நேய நிதியத்தின் வளர்ச்சிக்காகவும், உயர்ச்சிக்காவும் உங்களது ஆலோசனைகளை நீங்களும் வழங்கி எமது தேசப்பணிகளுக்கு உதவ ஊக்கத்துத்துடன் முன்வர வேண்டும் என்பதே எமது மக்களினதும், எமதும் விருப்பங்களாகும்.

தொண்டு நிறுவனங்களில் ஏற்கனவே நீங்கள் இருந்து பெற்ற அனுபவங்களையும், புதிய சிந்தனைகளையும் எம்முடனும் கலந்து பேசி எமது நிதியத்தை வழி நடத்தி செல்லும் வழி காட்டிகளாக நீங்களும் இணைந்து செயலாற்ற முன்வர வேண்டும் என நாம் உங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றோம். சிறந்த வழி காட்டிகளாகவும், சமூகத்தொண்டர்களாகவும், தேசத்தை நேசிப்பவர்களாகவும். எமது நிதியத்துடன் இணைந்து நீங்களும் பங்காற்ற வேண்டும் என்று நாம் எமது மக்களின் சார்பாக மனிதாபிமான வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது மக்களின் துயர் துடைப்பதற்கு நீங்களாகவே விரும்பி பங்களிப்பு செய்வதற்கு தயாராக இருக்கும் உங்களில் பலரும் எமது நிதியத்தின் தெண்டர்களாக இணைந்து செயற்படவும் முன்வருமாறும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எமது தாயகத்தில் மட்டுமன்றி, உலகின் எந்த பாகத்திலும் சரி நீங்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் உங்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரங்களை எமது மக்களின் மனிதாபிமான பணிகளுக்காக தொண்டர்களாக இணைந்து செயலாற்றுவதற்கு பயன்படுத்துமாறு நாம் நேசமுடன் உங்களை கை நீட்டி அழைக்கின்றோம்!....ஆக்கமே எமது நோக்கம்!.. அழிவுகள் அல்ல எமது தெரிவுகள்!!... அழிவுகளுக்காக நாம் எதையும் உங்களிடம் கேட்கப்போவதில்லை. ஆக்கத்திற்காகவே கேட்கின்றோம்.
எமது நிதியத்தின் தொண்டர்களாக இணைந்து நீங்களும் தொண்டாற்ற விரும்பினால் எமது மக்களின்

குனிந்த முகம் நிமிரும், கொடுமை எல்லாம் விலகும் எரிந்த நம் நிலம் செழிக்கும் மக்கள் முகம் சிரிக்கும்!....

எமது மக்களின் சார்பாக நேசமுடன் உங்களை அழைக்கும் மகேஸ்வரி மனித நேய நிதியம்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உடனடி நிவாரணம் - மீள் குடியேற்றம் - புனர்வாழ்வு - புனரமைப்பு
எம்மை பற்றி |செயற்திட்ட எல்லை வரைபடம் | மன்றக் கொள்கை | எம்முடன் தொடர்பு கொள்ள |மகேஸ்வரி மன்றம்info@maheswaryfoundation.org